Skip to content

அமுதசுரபி சிக்கனம்-கடன் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் அமுத சுரப்பி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் என்ற தனியார் நிறுவனம் பல ஊர்களில் அலுவலகம் அமைத்து அன்றாட கூலி வேலை செய்பவர்கள் சிறு வியாபாரிகள் என பலரிடம் தினமும் வசூல் செய்து 50, 100,500 ஆயிரம் என தொடர்ந்து வசூல் செய்து சிறுசேமிப்பு திட்டம் மூலமாக 3 மாதத்திற்கு பிறகு உரிய நபரிடம் பணம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் திடீரென அலுவலகம் கடந்த சில நாட்களாக திடீரென மூடப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அமுதசுரபி அலுவலகத்தில் திடீரென
பொருளாதார குற்றவியல் ஆய்வாளர் விமலா திடீர் ஆய்வுமேற்கொண்டார். அதில் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க் மற்றும் சில ஆவணங்கள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் பணி செய்தவர்களிடம் எவ்வளவு பேர் நுகர்வோர்கள் சிறு சேமிப்பு செய்து வருகின்றனர். எவ்வளவு பேருக்கு சிறு சேமிப்பு பணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு பேருக்கு மேலும் திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் முகவரி மற்றும் வேறு எந்தெந்த ஊர்களில் இது போல சங்கம் உள்ளது என விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!