கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை பகுதி பிள்ளபாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது ஒரே மகன் மோகன்ராஜ் வயது 23. இவருக்கு திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
கோகிலா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இன்று மாலை 6 மணி அளவில் மோகன்ராஜ் குளித்தலை பெரிய பாலத்தில் உள்ள தனது மனைவி கோகிலாவை பார்த்துவிட்டு வீட்டிற்கு திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது,
கே.பேட்டை பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற லாலா பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.