திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பா.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மதுரை மீனாட்சி இவருக்கு காளிதாஸ், சுரேஷ்,சௌமியா, மூன்று பிள்ளைகள் உள்ளனர். மதுரை மீனாட்சிக்கு 1996 ஆம் ஆண்டு இரண்டு சென்ட் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ராஜேந்திரன் மற்றும் மதுரை மீனாட்சி ஆகிய இருவரும் உயிரிழந்த உள்ளனர். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட அந்த இடத்தில் இரண்டாவது மகன் சுரேஷ் இதுவரை குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் காளிதாஸ் 2020ஆம் ஆண்டு தனது தம்பி சுரேஷுக்கு தெரியாமல் அந்த இடத்தை தனது பெயரில் மாற்றி உள்ளார் அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு பத்மினி என்ற நபருக்கு விற்பனை செய்ததாகவும்
கூறப்படுகிறது. இந்த தகவல் தெரிந்த சுரேஷ் இது சம்பந்தமாக திருப்பத்தூர் கோர்ட்டில் ஒன்பது மாதங்களுக்கு முன்பு தனக்கு தெரியாமல் அண்ணன் இடத்தை விற்பனை செய்துள்ளதாக வழக்கும் பதிவு செய்துள்ளார். மேலும் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து நேற்று சுரேஷ் குடியிருந்த குடிசை வீட்டை பத்மினி மற்றும் அவருடைய உறவினர்கள் அத்துமீறி நுழைந்து சூறையாடியாடி உள்ளனர். இதனை அறிந்த சுரேஷ் இது சம்பந்தமாக திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் பத்மினி மற்றும் அவருடைய உறவினர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
மேலும் நேற்று இரவு சூறையாடிய குடிசை வீட்டை தீயிட்டும் கொளுத்தியுள்ளனர். இது சம்பந்தமாக திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அரசு கொடுத்த நிலத்தை யாருக்கும் தெரியாமல் பத்திர பதிவு செய்தது மட்டுமல்லாமல் அதனை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.