திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் )திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சி மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் 7 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகள், 3 புறநகர் பேருந்துகள் மற்றும் 1 நகரப் பேருந்து உட்பட மொத்தம் 11 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட காலக்டர் சரவணன்,மேயர் அன்பழகன், ஆணையர் மதுபாலன், நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, நகரப் பொறியாளர் சிவபாதம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார், துணை மேலாளர்கள் ராமநாதன் , சாமிநாதன், புகழேந்தி ராஜ், பொருளாளர் துரை ராஜ், மண்டலக் குழுத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், மாவட்ட துணைத் தலைவர் கவுன்சிலர் முத்துச்செல்வம், குடமுருட்டி சேகர், மாத்தூர் கருப்பையா, ஜலந்தர் பஷீர், துபேல் அஹமது, மாநகர துணை செயலாளர்கள் கவுன்சிலர் கலைச்செல்வி, எம்.ஏ.எஸ்.மணி, கவிதா செல்வம், சுபா, ராமதாஸ், புஷ்பராஜ், வட்டச் செயலாளர்கள் பி.ஆர். பாலசுப்பிரமணியன், வி.செல்வராஜ், மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள். அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கே என் நேரு பேட்டி
பிறகு அமைச்சர் கே என் நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கும்பகோணம் போக்குவரத்து கோட்டம் கலைஞர் தொடங்கியது அதனால் அதை மாற்றவில்லை. கும்பகோணத்தில் இருந்தாலும் திருச்சியில் இருந்தாலும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வந்து கொண்டு தான் உள்ளது.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் நான், அறநிலையத்துறை அமைச்சர், துறை செயலாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களிடம் ஊதியம் குறைக்கப்படாது அவர்களுக்கான எந்த சலுகைகளும் பறிக்கப்படாது என்பதை உறுதியாக தெரிவித்தோம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் மீண்டும் பணிக்கு வந்து விட்டார்கள். அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் போராட்டம் சுமூகமாக முடிவடையும்.
கூட்டணி வலுவாக உள்ளது..
எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு எதுவும் பேசுவதற்கு இல்லை என்பதால் திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது என தொடர்ந்து பேசி வருகிறார். அவர் கூட்டணியில் இருந்தவர்கள் தான் முதல்வரை சந்தித்துள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் கனவு பலிக்காது திமுக கூட்டணி தொடரும் மீண்டும் ஸ்டாலின் தான் முதலமைச்சராவார்.திமுகவை வீழ்த்த வேண்டும் என பாமக ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்கள் ஆனால் திமுகவை வீழ்த்த முடியவில்லை . திமுகவை விமர்சித்தால் தான் அடையாளம் தெரியும் என்பதால் அன்புமணி ராமதாஸ் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார்.
பாமகவின் ஒரு தரப்பினர் எங்கள் கூட்டணிக்கு வருவார்களா என்பது எனக்கு தெரியாது ஆனால் எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.
திமுக ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளையும் அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம். திமுக ஆட்சியில் மக்கள் நன்றாக இருக்கிறார்கள் மீண்டும் திமுக தான் ஆட்சி அமையும்.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வருகிறாரே என்கிற கேள்விக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் 8 முறை தமிழகத்திற்கு வந்தார் திமுக 40 க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றது .
இவ்வாறு அமைச்சர் கே என் நேரு கூறினார்.