பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இவரே சில வருடங்கள் அந்த கட்சியின் தலைவராக இருந்தார். பின்னர் ஜி.கே. மணியை கட்சியின் தலைவராக நியமித்தார். ஒரு வருடத்திற்கு முன் ராமதாசின் மகன் டாக்டர் அன்புமணியை கட்சியின் தலைவராக ராமதாஸ் நியமித்தார். ஜி.கே. மணி கவுரவ தலைவராக மாற்றினார்.
இந்த நிலையில் கடந்த முறை பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தபோது ராமதாஸ், அன்புமணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது நினைவிருக்கலாம். அப்போது ராமதாஸ், நான் தான் இந்த கட்சியின் தலைவர், என் உத்தரவை ஏற்காதவர்கள் இந்த கட்சியில் இரந்து போகலாம் என்றார்.
ராமதாசின் பேரனை இளைஞர் பிரிவுக்கு தலைவராக நியமித்ததை அன்புமணி ஏற்காததால் இந்த மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் பேட்டி அளித்தார். அப்போது அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதுடன், அவரை செயல் தலைவராக மாற்றி உத்தரவிடுவதாக கூறினார்.
அத்துடன் பாமக தலைவராக தானே நீடிப்பதாக ராமதாஸ் கூறினார்.
மற்ற பொறுப்பாளர்கள் தற்போது உள்ளவாறே தொடர்ந்து செயல்படுவார்கள்.
இனி பாமகவினர் தீவிரமாக செயல்பட்டு 2026 தேர்தல் வெற்றிக்கு பணிமாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புமணி நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. 2026 தேர்தலுக்கு இளைஞர்களை தயார்படுத்தவே இந்த நடவடிக்கை என்றும் ராமதாஸ் கூறினார்.
பாமகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.