செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அன்புமணி தலைமையில் இன்று பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அன்புமணி தரப்பு பாமக பொதுக்குழு சற்று நேரத்தில் மாமல்லபுரத்தில் கூட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திடுவது தொடங்கி அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேபிள்களுக்கு பின்னரும் தனித்தனியாக சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அன்புமணி தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களை 16 சிசிடிவி வாயிலாக அடையாளம் காணவும், வருகையை பதிவு செய்யவும் அன்புமணி திட்டமிட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தில் இருதரப்பினரும் ஆவணங்களை கொடுத்து வரும் நிலையில், உறுப்பினர்களை அன்புமணி தரப்பு ஆவணப்படுத்துகிறது. இதேபோல் பொதுக்குழுவில் பங்கேற்க பாமக நிறுவனர் என்ற முறையில் ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்
