சென்னை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தமிழக அரசியலில் பேசுபொருளாக உள்ளது. அன்புமணி, தனது தந்தையை சமாதானப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது தந்தையும், பாமக நிறுவனருமான ராமதாஸ் இல்லத்திற்கு இன்று (ஆகஸ்ட் 15) வருகை தந்தார்.
இந்த வருகை அவரது தாயார் சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்றதாகவும், அவரை சந்திப்பதற்காகவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருகை பாமகவில் உள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசியல் மோதல்களின் பின்னணியில் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 17 அன்று ராமதாஸ் தரப்பில் நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த வருகை குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை, ஆனால் இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.