திருவெறும்பூர் தொகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். வார்டு எண் 46க்கு உட்பட்ட மலையடிவாரம், மாரியம்மன் கோவில், தெரு, நேரு நகர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 62 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர்
மு.மதிவாணன், திருச்சி மாவட்ட டி.ஆர்.ஓ ராஜலட்சுமி ,மாநகராட்சி அதிகாரிகள் சுந்தரவடிவேல்
ஜெகஜீவன் ராமன்,மாமன்ற உறுப்பினர்கள் தர்மராஜ், ரமேஷ், வட்டக் கழகச் செயலாளர்கள் பரமசிவம், முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
