ஈரோடு, விஜயமங்கலம் பெருந்துறை, சுங்கச்சாவடி அருகே உள்ள 16 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் ஏராளாமான மக்கள் குவிந்தனர். பொதுமக்களின் நடுவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது… மஞ்சள் என்றாலே மகத்தானது, அதிர்வை ஏற்படுத்தும் மஞ்சள் நகர்ததிற்கு எனது வணக்கம். மஞ்சள் என்றாலே தனி VIBE தான்..
அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அன்றைக்கும், இன்றைக்கும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுபவர் பெரியார். என்னை வீழ்த்த என்னவெல்லாம் அவதூறு பரப்பலாம் என சிலர் சூழ்ச்சி செய்து வருகின்றனர். அனைத்தையும் விட்டுவிட்டு, மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன். வள்ளுவர்கோட்டத்திற்கு காட்டும் அக்கறையை மக்கள் வாழ்வாதாரத்தில் காட்டுவதில்லை. என்மீது அவதூறு பரப்புகின்றனர். மக்கள் என்னை கைவிடமாட்டார்கள். இங்கு நடப்பது ஆட்சியா அல்லது கண்காட்சியா?.. மாணவர்கள் சேர்க்கை இல்லையென அதிக அரசு பள்ளிகள் மூடப்பட்டது யார் ஆட்சியில்?.. மக்களை பற்றி அரசுக்கு கவலை இல்லை. 207 அரசு பள்ளிகளில் மூடப்பட்டது யார் ஆட்சியில். எதிரிகள் யார் என்று சொ்லிலவிட்டுத்தான் களத்திற்கு வந்துள்ளோம். மஞ்சள் விவசாயத்தை மேம்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உலகவே பயன்படுத்தும் மஞ்சளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு ஒன்றும் செய்யவில்லை. விஜயை எப்படி முடக்கலாம் என 24 மணி நேரமும் சிந்தித்து செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. திமுக ஆட்சியில் , தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தவெக ஆட்சியமைந்தால் தமிழகத்தில் சட்டம்ஸ்ர-ஒழுங்கு பாதுகாப்பில் சமரசம் கிடையாது. எனது கேரக்டர் 2026ல் தெரியும். எம்ஜிஆர், ஜெயலலிதா சொன்னதை நானும் சொல்கிறேன் திமுக ஒரு தீயசக்தி என்று இவ்வாறு பேசினார்.

