கொரோனா ஸ்பெஷல்… புக்கை பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலை. அனுமதி..

133
Spread the love
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. கொரொனோ பாதிப்பு காரணமாக கடந்த முறை நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளை  ஆன்-லைன் வழியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்நிலையில், பொறியியல் செமஸ்டர் தேர்வின்போது, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இதன்படி வரும் மே மாதத்தில் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. கேள்விகள் நேரடியாக கேட்கப்படாமல், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது. அதன்படி விடை எழுதும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து அறிந்து விடை அளிக்கலாம். அதேபோன்று தேர்வின்போது இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY