அண்ணா பல்கலைகழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான 13வது மண்டலத்திற்கு உட்பட்ட பூப்பந்து போட்டி திருச்சியில் நடந்தது.
சென்னை அண்ணா பல்கலைகழக விளையாட்டு வாரியம் சார்பில் நடந்த 13வது மண்டலத்திற்கு உட்பட்ட பூப்பந்து இறுதி போட்டியில் கேர் பொறியியல் கல்லுாரி வெற்றி பெற்று கோப்பை வென்றது. பல்கலைகழக வளாக பொறியியல் கல்லுாரி (திருச்சி வளாகம்) 2வது இடம், சாரநாதன் பொறியியல் கல்லுாரி 3வது இடம், ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லுாரி 4வது இடத்தை பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கேர் பொறியியல் கல்லுாரி முதல்வர் சாந்தி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர்கள் பன்னீர்செல்வம், முருகன், ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

