Skip to content

அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது ஞானசேகரன் யாரிடமோ சார் என்று பேசியதாக தகவல் வெளியான நிலையில், யார் அந்த சார் என எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.  ஞானசேகரனுக்கு எதிராக குற்றப் பத்திரிகை சென்னை உள்ள மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்  சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. கடந்த டிசம்பரில் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

error: Content is protected !!