பாஜகவுடன் அதிமுக கூட்டணி ஏற்பட தடையாக இருந்த, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வழங்க பாஜக விரும்புகிறது. இதற்காக அவலை ராஜ்சபா உறுப்பினராக்க முயற்சி நடக்கிறதுஐ. ஜூலை மாதம் தமிழ்நாடு, ஆந்திராவில் ராஜ்ய சபா சீட் காலியாகிறது.
ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி ஆதரவில் அண்ணாமலையை ராஜ்யசபாவுக்கு அனுப்ப பாஜக மேலிடம் நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எம்.பி. பதவி கிடைத்தால், அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.