10ம்வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் இன்று வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியில் தேர்வு எழுதிய 70மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலும் பள்ளியிலும் மாணவி எல். பூர்விகா 500க்கு 495 மார்க் பெற்று
பெற்று முதலிடம் பெற்றார்.
2ம்இடத்தை எம். பிருந்தா480/500எடுத்து பெற்றார். எம். அப்ரின்479/500எடுத்து3வது இடம்.
11மாணவிகள் 450க்குமேலும், 28பேர் 400க்குமேலும், 18பேர் 300க்குமேலும்,
9பேர் 300க்குகீழும் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
அறிவியலில்2பேரும்,
சமூக அறிவியலில்5பேரும் சென்டம் பெற்றனர்.
சிறப்பிடம் பெற்ற அனைத்து மாணவி களையும் பள்ளி தலைமை ஆசிரியை சிராஜுனிசா மற்றும் சக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்
பாராட்டி இனிப்பு வழங்கினர்.