Skip to content

அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதல் சத்யா பன்னீர்செல்வம் விட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை   போலீஸார் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  2016 – 2021ல் பண்ரூட்டி எம்.எல்.ஏவாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் மீதும், அவரது கணவர் பன்னீர்செல்வம் மீதும்  சொத்துக்குவிப்பு  மற்றும் பணமோசடி வழக்கு உள்ளது.

2011 முதல் 2016ம் ஆண்டு வரை பன்னீர்செல்வம்  பண்ரூட்டி நகர மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது டெண்டர் விடுவதில் முறைகேடு செய்து ரூ. 20 லட்சம் வரை பணமோசடி செய்ததாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாராணை நடத்தி வருகின்றனர்.   இந்த சொத்துக்குவிப்பு மற்றும் பணமோசடி  வழக்கு தொடர்பாக 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரது வீட்டில் காலை முதல் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!