Skip to content

மணப்பாறை அருகே போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-பயிற்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் தனியார் தன்னார்வ அமைப்பான ஜேசிஐ டவுன் பார்மர்ஸ் சார்பில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் பயிற்சி நடைபெற்றது. அப்போது போதைக்கு எதிராக செயல்படுவது குறித்து மாணவ – மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் மாணவ- மாணவிகள்

கையெழுத்திட்டனர். இதே போல் போதைக்கு எதிராக மாணவ – மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு சென்றனர். இதில் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!