அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, இவர் அதிமுக மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். அதிமுக, பாஜக கூட்டணியை இவர் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் இன்று அன்வர்ராஜா அண்ணா அறிவாலயம் வந்து , திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னியில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார், அப்போது அவர் முதல்வருக்கு பொன்னாடை அணிவித்தார். அதைத்தொடர்ந்து அவருக்க திமுக உறுப்பினர் சீட்டை முதல்வர் வழங்கினார்.
முதல்வர; ஸ்டாலினும், அன்வர்ராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.அப்போது அன்வர்ராஜாவின் ஆதரவாளர்கள், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் , அமைச்சர்கள் சேகர்பாபு, கண்ணப்பன், எ.வ. வேலு, மற்றும் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திமுகவில் இணைந்தது குறித்து அன்வர்ராஜா அண்ணா அறிவாலயத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ் இனத்தலைவர், ஒப்பாரும், மிக்காரும் இல்லாத் தலைவர், தமிழக முதல்வர் தளபதி முன்னிலையில் திமுகவில் என்னை இணைத்துக்கொண்டேன். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். அது காரணமல்ல, நான் சந்தர்ப்பவாதி அல்ல. கொள்கைவாதி. கருத்தியில் காரணமாக அண்ணா தலைமையில் செயல்பட்டோம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவன் நான்.
அதிமுக கொள்கையில் இருந்து தடம் புரண்டு, பாஜக கையில் சிக்கி இருக்கிறது. என்டிஏ கூட்டணி ஆட்சி, பிஜேபியும் ஆட்சியில் பங்கு பெறும் என்று அமித்ஷா கூறிவிட்டார். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என அமித்ஷா கூறவில்லை. எடப்பாடி 10 நாள் சுற்றுப்பயணத்தில் என்ன சொல்ல விரும்புகிறார். தான் முதல்வர் வேட்பாளர் என்று கூட அவரால் சொல்ல முடியவில்லை. இதுதான் எடப்பாடி நிலைமை். ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று நேற்றுதான் கூறுகிறார். நான் தான் முதல்வர் வேட்பாளர் என எடப்பாடியால் உறுதியாக கூறமுடியவில்லை.
பாஜக என்பது நெகட்டிவ் போர்ஸ். அதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கு நிகரான தலைவர் யார்? இந்தியாவுக்கே உதாரணமாக திகழ்கிறார் ஸடாலின். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் நோக்கமல்ல, அதிமுகவை அழிப்பதே அதின் நோக்கம். பாஜக கூட்டணியால் அதிமுகவினர் வருத்தத்தில் , அதிருப்தியில் உள்ளனர். திமுக, அதிமுக தான் தமிழ்நாட்டின் பிரமாண்ட கட்சிகள். மாநில உரிமைக்காக போராடும் இயக்கம் திமுக.
பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என எடப்பாடியிடம் எவ்வளவோ எடுத்து கூறினேன். வாஜய்பாய் தலைமையிலான பாஜக பிற கட்சிகளை அழிக்க நினைத்து இல்லை.
பாகிஸ்தான், இந்தியா போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் கூறினார். அதை யாரும் நம்பவில்லை. அதுபோல எடப்பாடி நான் தான் முதல்வர்வேட்பாளர் என கூறி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.