புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீஸ் சரகத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேவின் தனிப்படையினர் தீவிரமாக துப்புதுலக்கி, குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்தனர். இதையொட்டி நேற்று புதுக்கோட்டை வந்த திருச்சி டிஐஜி சரவண சுந்தர், எஸ்.பியின் தனிப்படையினரை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
