சென்னையில் நடந்த மாநில அளவில் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவில் தேர்வு பெற்ற மாணவர்கள் தஞ்சாவூர் எம்எல்ஏ டி .கே .ஜி . நீலமேகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னையில் கடந்த செய்.29ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான எஸ் ஜி எஃப் ஐ வில்வித்தை போட்டியில் தஞ்சை சேர்ந்த மாணவர்கள் கைலாஷ், பிரகனீஷா ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
மேலும் தேசிய அளவிலான 69 வது வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக பங்கேற்க தேர்வாகி உள்ளனர். இதையடுத்து தஞ்சாவூர் எம்எல்ஏ டி கே ஜி நீலமேகத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கர்ணன், பயிற்சியாளர்கள் வீரமுத்து, விஜய், காவியன் ஆகியோர் உடன் இருந்தனர்.