கரூரில் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட மாநகர பகுதி நகர ஒன்றிய பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..இதில் சிறப்பு விருந்தினராககலந்து கொண்ட மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ் கலந்து கொண்டார்.மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிகலந்து கொண்டு பேசுகையில்…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலில் நின்று வென்ற குளித்தலை தொகுதி அடங்கிய கரூர் மாவட்டம் கழகத்தின் கோட்டையாக அமைந்துள்ளது.வரும் ஆண்டுகளிலும் தொடர்வெற்றியினைப் பெறுவோம். பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை முப்பெரும் விழா பெற்றது இதற்கு காரணமான அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இளைஞர் அணி மண்டல மாநாடு குறித்த முதல் ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்திலிருந்து 20 ஆயிரம் பேர் கோவையில் மண்டல மாநாட்டில்
பங்கேற்போம் உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் 2026 தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றியை பெற்று தளபதி அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்கள் மக்கள் அதற்கு தயாராகி விட்டார்கள் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் நான்கு தொகுதிகளிலும் அதிக ஓட்டு பெற்று வெற்றி பெறச் செய்து தலைவரின் கரங்களில் ஒப்படைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க இந்த கூட்டத்தில் சூளுரை ப்போம்
நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி முடிந்தால் போட்டி போட்டு பார்க்கட்டும் நான்காண்டு சாதனை திட்டங்கள் மகளிர் காண திட்டங்கள் மாணவச் செல்வங்களுக்கான திட்டங்கள் மக்களுக்கான நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் தொடங்கி அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள் சுதந்திரம் பெற்ற காலம் முதல் கிடைத்துவிடாத திட்டங்கள் எல்லாம் ரூ.3,000 கோடி அளவுக்கு நிதிகளை கொடுத்து திட்டங்களை தந்து இருக்கின்றார்கள் பொதுமக்கள் தங்களது ஒட்டுமொத்த ஆதரவை வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் வழங்குவார்கள் அதனை வாக்குகளாக மாற்ற வேண்டும் கழகத்தினருக்கு இணையாக இளைஞர் அணியினர் போட்டி போட்டு பணியாற்ற வேண்டும் ஆரோக்கியமான போட்டி இருந்தால்தான் இன்னும் இயக்கத்தை வலுப்படுத்த முடியும் அதிக வாக்குகளை பெற முடியும் என்றார்