Skip to content

அரியலூர்- லாரி மோதி 20 செம்மறி ஆடுகள் பலி- பொதுமக்கள் மறியல்

அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்று விட்டு, நேற்று மாலையில் அரியலூர் – செந்துறை சாலையில் வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். தனியார் ( ராம்கோ) சிமெண்ட் ஆலை அருகே ஆடுகளை

ஓட்டி வந்து கொண்டிருந்தபோது, சிமெண்ட் ஆலையிலிருந்து கிளிங்கர் ஏற்றிக் கொண்டு, சேலம் சென்ற டிப்பர் லாரி எதிர்பாராத வகையில் செம்மறி ஆடுகள் மீது மோதியது.
இதில் கருப்பையாவுக்கு சொந்தமான 20 செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனையடுத்து அங்கு திரண்டு வந்த கிராம மக்கள், சாலையில் விபத்து ஏற்படுத்திய லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த செம்மறி ஆடுகளின் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

error: Content is protected !!