அரியலூர் பேருந்து நிலைய விவகாரத்தில் திமுகவைச் சாடி அதிமுக முன்னாள் அரசு கொறடா பேச்சு…
“5 வருட சாதனை- அரைகுறை பஸ் ஸ்டாண்டா? இது உங்களுக்கு கேவலம்!” அமைச்சர் சிவசங்கரை விளாசிய முன்னாள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன்…
அரியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய அதிமுக முன்னாள் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரன்,
அரியலூரில் திமுகவினரால் கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. துவங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை. அந்த அறிவாலயம் இரவு பகலாக இன்னும் ஓர், இரு வாரங்களில் திறக்கப்படுகின்ற நிலையை எட்டுகிறது. ஆனால் இங்கு அரியலூரிலே பொதுமக்களுக்காக ஒரு

பஸ் ஸ்டாண்ட், ஆட்சிக்கு வந்தவுடன் பூஜை போடப்பட்டது. நான்கரை வருடங்கள் கழித்து
அந்த பஸ் ஸ்டாண்ட் அரைகுறை வேலையோடு திறக்கப்படுகிறது என்று சொன்னால், உங்கள் ஆட்சியினுடைய அவல நிலை எப்படி இருக்கிறது? நீங்கள் செய்த சாதனை அரியலூர் மாவட்டத்திலே ஒரு பேருந்து நிலையத்தை கட்டிவிட்டு, அந்த பேருந்து நிலையத்தை ஐந்தாண்டு காலமாக கட்டிய சாதனை என்று சொன்னால், அது இங்கு இருக்கின்ற அமைச்சர், இங்கு இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினருடைய ஒரு கேவலத்தை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது என்று அமைச்சர் சிவசங்கரை கடுமையாக தாக்கி அதிமுக முன்னாள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தேசிய ஜனநாய கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோசமிட்டனர்.

