Skip to content

அரியலூர்- பள்ளியில் மரம் முறிந்து விழுந்து 2ம் வகுப்பு மாணவி மயக்கம்

  • by Authour

அரியலூர் – நாகம்பந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் உணவு சாப்பிட சென்ற 2 ஆம் வகுப்பு மாணவி ரோஷினி மீது வேப்பமரம் கிளை முறிந்து விழுந்ததில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள நாகம்பந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ரோஷினி. இவர் காலை உணவு திட்டத்தில் உணவு வாங்க தட்டு எடுத்துச் சென்ற பொழுது பள்ளி வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் ரோஷினி சம்பவ இடத்திலேயே மயங்கினார். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எந்தவித

நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் மாணவியின் தந்தை கலையரசன் ஒரு கால் ஊனமுற்ற நிலையில் தகவல் அறிந்து பள்ளிக்கு சென்று மாணவியை பள்ளியில் இருந்து அழைத்து சென்று ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். பள்ளி மாணவியின் தலையில் கிளை விழுந்து பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத சம்பவம் அப்பகுதியில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை வேளையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகாராஜன் கைலியுடன் பள்ளி வளாகத்தில் சுற்றி வந்தது பெற்றோர்கள் மத்தியில் பள்ளி நிலை குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!