இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு தினமான இன்று, மாவட்ட தலைநகர் அரியலூரில் பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ஏ ஐ டி யு சி சுகாதார தொழிலாளர்கள் சார்பாக அரியலூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து சங்கத் தலைவரும் உள்ளாட்சித் துறை சம்மேளன மாநில செயலாளர் தோழர் டி தண்டபாணி தலைமையில் நகராட்சி ஏ ஐ டி யு சி செயலாளர் ரெ. நல்லுசாமி, செ மாரியப்பன் முன்னிலையில் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகராட்சி தொழிலாளர்கள் கு. சிவஞானம், க. பெருமாள், ரெ. வெங்கடேசன், ரா முத்தையன், க. கலையரசி, அ. செல்வி, தே. சின்னப்பொன்னு, தமிழரசி, பா. காத்தவராயன் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றிய சிபிஐ துணைச் செயலாளர் டி கே காத்தவராயன், கொ. ராமன் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். மாலை அணிவித்து டி.தண்டபாணி பேசும்போது, இன்றைக்கு பாகுபாடின்றி அனைவருக்கும் வாக்கு அளிக்கும் உரிமையை சட்டமாக்கிய டாக்டர் அம்பேத்கர் புகழை விளக்கிபேசினார்.
அரியலூர்- அம்பேத்கர் நினைவு தினம்-ஏஐடியுஜி புகழஞ்சலி
- by Authour

