Skip to content

அரியலூர், ஆண்டிமடம் ஐடிஐ மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்…

அரசு ஐ.டி.ஐ-யில் சேர மாணவர்கள் 13.06-2025-வரை விண்ணப்பிக்கலாம்…அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பு, அரியலூர் அரசு ஐ.டி.ஐ-யில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க ஜீன் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், மற்றும் தனியார் ஐ.டி.ஐ-க்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆண்களுக்கு 40 வயதிற்குள்ளும், பெண்களுக்கு வயது வரம்பு இல்லை, விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- Debit card/ Credit card/ Net banking வாயிலாக செலுத்த வேண்டும். அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழிற்நெறி வழிகாட்டி மையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் இயங்கும் சேர்க்கை உதவி மையங்களிலும் தனியார் கணினி மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார். 1. அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் – 9499055877, 04329-228408 2. அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் – 9499055879
error: Content is protected !!