அரியலூர் மாவட்டம், குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு ராஜன் இவரது மகன் கஜேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட கஜேந்திரன் மாலை தனது கிராமத்தில் அம்மன் கோவில் பால்குடம் எடுக்கும் விழாவில் கலந்து கொண்டார் அப்போது கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள அரிய தங்கம் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்துச் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடினர். அப்போது சிறுவன் கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கொள்ளிடம் ஆற்றில் குளித்தனர். திடீரென கஜேந்திரன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார் இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆற்றில் குதித்து கஜேந்திரனை தேடினர் நீண்ட நேரத்திற்கு பிறகு கஜேந்திரனை உயிருடன் மீட்ட பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருமானூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு கஜேந்தனை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது இச்சம்பவம் குறித்து துத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர் – கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு
- by Authour
