அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த குருநாதனுக்கு(50) உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் நேற்று மதியம் காரில் வந்து வி.கைகாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் காரில் ஸ்ரீபுரந்தான் நோக்கி குருநாதன் சென்று உள்ளார். அப்போது நாகமங்கலம் கிராமத்தை கார் கடந்த போது குருநாதனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள வீட்டின் சுற்று சுவரை உடைத்துக்கொண்டு கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் குருநாதனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கார் விபத்து ஏற்பட்ட இடத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்பட வில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது

