அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரிக்கக் கூடும் என்பதால், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்னசாமி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து படிப்படியாக திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டு, 21.10.2025 அன்று மாலை 4.00 மணிக்கு 35,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் பருவமழை காலம் என்பதனாலும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவில் இருப்பதனாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தினை பொருத்து எந்த நேரத்திலும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரிக்கக் கூடும் என்பதால், அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும், பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் இயங்கிவருகிறது. இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கும். வாட்ஸ்அப் மூலம் 9384056231 என்ற எண்ணிற்கும் தகவல் / புகார் தெரிவித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.