Skip to content

அரியலூர் … . கவர்னரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

தமிழ்நாட்டு மக்களையும் சட்டப்பேரவை மரபையும் அவமதித்து தமிழ்நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்படும் ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகில் திமுக சார்பில் அரியலூர் தொகுதி சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் முனைவர் சபாபதி மோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் தொடர்ந்து அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது ‌.

தொடர்ந்து தமிழக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் ஆளுநர் ரவி செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது சட்டப்பேரவை

கூட்டத்தொடரில் தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் வெளி நடப்பு செய்த ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கணேசன், சந்திரசேகர் லதா பாலு மற்றும் ஒன்றிய நகர செயலாளர்கள், கழக அனைத்து அணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து தஞ்சையிலும் கவர்னரை எதிர்த்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடன் நிர்வாகிகள், பொதுமக்கள் , அனைத்து

அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!