தமிழ் மாதங்களில் மாசி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் வரும் நாளை மாசி மகம் என்று முன்னோர்கள் கொண்டாடியது உடன் அன்றைய தினம் ஆறு மற்றும் குளங்களில் நீராடி பாவங்களை போக்கி புண்ணிய பலன்களை பெறுவதை பொதுமக்கள் ஐதீகமாக கொண்டுள்ளனர். மேலும் முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளிப்பது பல ஜென்ம பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பதும் ஐதீகம். இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தின் தென் எல்லையாக ஓடும் கொள்ளிட ஆற்றங்கரையில் உள்ள திருமானூர், அணைக்கரை, மற்றும் வட எல்லையாக உள்ள வெள்ளாற்றங்கரைகளை ஒட்டியுள்ள பல
கிராமங்களிலும் மற்றும் கிராமங்களில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில்மாசி மகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் அளித்து, திதி கொடுத்து வழிபாடு செய்தனர். முன்னோர்கள் இறந்த தினத்தை மறந்து விட்டாலும் மகா மகத்தன்று
முன்னோர்களை நினைத்து மகத்தில் திதி கொடுப்பது இந்துக்களின் வழக்கமாக உள்ளது. மறைந்த தங்களது முன்னோர்களுக்கு, ஆறு, ஏரிக்கரை, குளம் போன்ற இடங்களில், சிவாச்சாரகளை கொண்டு வாழை இலையில், பச்சரிசி, எள்ளு, தேங்காய், காய்கறிகள், கீரை வகைகள், பூக்கள் உள்ளிட்டவை வைத்து, தர்ப்பை நான் அணிந்து, படையல் இட்டு, முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், தங்களுடைய பாவங்கள் நீங்கி, தாங்களும், தங்களுடைய சந்ததியினரும் நலமாக வாழ வழிபாடு செய்தனர்.