அரியலூர் மாமன்னன் ராசேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டத் தொடங்கி 1000-வது ஆண்டு விழா மற்றும் தெற்காசிய நாடுகளில் படையெடுத்த கடல் பயணம் தொடங்கி 1000-வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 27ஆம் தேதி கங்கைகொண்ட சோழபுரம் வருகிறார்.
அவரது வருகையை ஒட்டி அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் ஹெலிபேட் மைதானம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரதமர் வந்திருங்கும் ஹெலிபேட் மைதானம், அவர் பயணிக்கும் வழித்தடங்கள் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அமைந்துள்ள பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்து சிவில் ரிமோட் பைலட் ஏர்கிராஃப்ட் சிஸ்டம் (RPAS)/ டிரோன்கள் இயக்க அனுமதி கிடையாது என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில் வருகின்ற 26 மற்றும் 27 ஆகிய இரண்டு தினங்களிலும் அரியலூர் மாவட்டத்தில் டின்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார்.