அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு கோதண்ட ராமசாமி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் ஆகும். இக்கோவிலில் தசாவதார சிற்பங்கள் ஆறடி உயரத்தில் உள்ள ஒரே கோவிலாகவும், வில்லேந்திய ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கோதண்ட ராமர் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேர் இந்து சமய அறநிலைத்துறை மற்றும்
ஆன்மீக பக்தர்களால் புனரமைக்கப்பட்டு பத்து நாள் திருவிழா இன்று தொடங்கியது. அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கருடன் கொடி இன்று ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று முதல் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறுகிறது. 83 ஆண்டுகளுக்குப் பிறகு அரியலூர் நகரில் புதிய தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெறுவதால் ஆன்மீக பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆழ்துள்ளனர்.