Skip to content

அரியலூர்- அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்படும் நிலைகள் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பொங்கல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கொண்டாடி மகிழ்கின்றனர். அரியலூர் அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் வேஷ்டி மட்டும் புடவைகள்

அணிந்து வருகை தந்தனர். பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து, வாழ்த்துக்கள் பொங்கிய பின் படையல் இட்டு, பொங்கல் பானையை சுற்றி குறவை மற்றும் கும்மி அடித்து கொண்டாடினர். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு கயிறு இழுத்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், உறியடித்தல்

உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தைப்பொங்கல் திருநாளை அரசு கல்லூரிகளில் மாணவ மாணவிகள் தமிழரின் பாரம்பரிய முறைப்படி கொண்டாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

error: Content is protected !!