அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம் தேளூர்மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ஆண்டிப்பட்டாக்காடு ஊராட்சிக்குட்பட்ட வள்ளக்குளம் கிராமத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட அதிகபடியான மின்சாரத்தின் காரணமாக ஊர் முழுவதும் அனைத்து வீடுகளிலும் TV. ப்ரிஜ் மின்விசிறி லைட் உள்ளிட்ட அனைத்து மின்சார சாதனங்களும் பழுது ஏற்பட்டது. இரவு 12 மணிக்கு பொதுமக்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்தபோது இச்சம்பவம் ஏற்பட்டது. டிவி ஃபேன் ஆகியவை எடுத்து உருகிய சத்தத்தில் விழித்தெழுந்த மக்கள் வீடுகளில் பொருள்களை பார்த்து அச்சத்தில் ஆழ்ந்தனர். உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கிராமம் முழுவதும் பல இலட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தங்களது இழப்பீடுகளை ஆய்வு செய்து தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூர்-உயர்அழுத்த மின்சாரம்- ஊர் முழுவதும் டிவி-பிரிட்ஜ் பழுது..
- by Authour
