Skip to content

அரியலூர்.. மின்காசிவால் தீப்பற்றி எரிந்த துணிக்கடை

  • by Authour

அரியலூரில் மின்கசிவ் காரணமாக தீப்பற்றி எரிந்த துணிக்கடை… 3 லட்சம் பணம் மற்றும் பல லட்சம் மதிப்பிலான துணிகள், மின் சாதனங்கள் முற்றிலும் எரிந்து நாசம்… நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத் துறையினர்…

அரியலூர் நகரின் முக்கிய கடைவீதிப் பகுதியான தேரடியில் சண்முகம் என்பவர், கடந்த பல ஆண்டுகளாக சண்முக ஜவுளி ஸ்டோர் என்ற துணிக்கடையை நடத்தி வருகிறார். தீபாவளி விற்பனையை முடித்து நேற்று இரவு ஏழு மணிக்கு, கடையை பூட்டிவிட்டு சண்முகம் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இரவு 11 மணியளவில் இரவு ரோந்து வந்த போலீசார் அவரது துணிக்கடையில் இருந்து புகை வெளியே வருவதை பார்த்து கடைக்கு அருகில் சென்று பார்த்தபோது தீப்பற்றியுள்ளது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துவிட்டு, துணிக்கடையின் உரிமையாளர் சண்முகத்தை அழைத்து வந்து கடையை திறந்து பார்த்தனர். கடையில் உள்ளே தீப்பற்றி பிரித்துக் கொண்டிருந்தது. அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், மின்சாரத்துறையினர் அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ பரவுவதை தடுக்கும் வகையில் மின் இணைப்பை துண்டித்தனர்.

மொத்தம் இரண்டு தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின், தரை தளத்தில் இருந்த துணிகள் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததால் தீயணைப்புத் துறை வாகனத்துடன், கூடுதலாக செந்துறை தீயணைப்பு நிலையத்திலிருந்தும், தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்களும் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

மேலும் ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு துணிக்கடையின் பிரதான இரும்பு கதவை உடைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஏறக்குறைய 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் தீபாவளி அன்று விற்பனை முடித்து கடையிலேயே வைத்திருந்த, ரூபாய் 3 லட்சம் பணம் எரிந்து சாம்பலானது. மேலும் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் புதிய ரக துணிகளை சண்முகம், விற்பனை செய்த பணமும், மிச்சம் இருந்த புதிய ரக துணிகள், கம்ப்யூட்டர் சாதனங்கள், மின்சார சாதனங்கள், பர்னிச்சர்கள் ஆகிய பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானதால் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட ஜவுளி கடை தீ விபத்து குறித்து அரியலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர். தீபாவளி முடிந்த நேரத்தில் ஏற்பட்ட ஜவுளி கடை தீ விபத்தால் அரியலூர் நகரில் வியாபாரிகள் மத்தியில் சோகம் நிலவியுள்ளது.

error: Content is protected !!