அரியலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், முக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள்,
பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாக பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகன சோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையின் நடுவே கேக் வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. சாலைகளில் மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் தொந்தரவு செய்யும் வகையில் நடந்துகொள்ளுதல் கூடாது. மேலும் இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்பவர்களின் மீது வழக்கு பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும், விடுமுறைக்கு நீண்ட நாட்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூருக்கு செல்பவர்கள் கட்டாயம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்லுதல் வேண்டும்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எத்தகைய செயல்களிலும் இளைஞர்கள் ஈடுபடுதல் கூடாது எனவும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவிட்டுள்ளார்கள்.

