Skip to content

அரியலூர்… குற்ற வழக்குளில் தொடர்புடைய நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு

அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பரதூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சாமிநாதன் என்பவரின் மகன் வேல்முருகன் (37). கடந்த 21.01.2026ந்தேதி கீழக்காவட்டாங்குறிச்சி டாஸ்மாக் கடையில் ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வீச்சரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டார். திருமானூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வேல்முருகன் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் வேல்முருகன் சமூகத்திற்கும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாலும், வெளியே வந்தால் மேலும் பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடக்கூடும் என்பதாலும், வேல்முருகன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க கோரி, திருமானூர் காவல் ஆய்வாளர் குணசேகரன் பரிந்துரை செய்ததின் பெயரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்தார். இதற்கான ஆணை, அரியலூர் மாவட்ட காவல்துறையினரால் திருச்சி மத்தியசிறைக் காவல் அதிகாரிகள் மூலம் வேல்முருகனுக்கு வழங்கப்பட்டது.

error: Content is protected !!