Skip to content

அரியலூரில் பொதுப்பாதை பிரச்சனை காரணமாக இருதரப்பு இடையே மோதல்.

அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம், பாலக்கரை பகுதியில் உள்ள முத்துவேல் என்பவர் தனது பேரன் கோகுல் என்பவருக்கு தனது இடத்தை தான செட்டில்மெண்டாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 150 ஆண்டு காலமாக அப்பகுதி பொதுமக்கள் முத்துவேல் அவர்களின் இடத்தில் பொதுப் பாதையாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையிலையில் கோகுல் பெயருக்கு தனது தாத்தாவின் நிலம் மாற்றப்பட்ட நிலையில் முத்துவேலின் பேரன் கோகுல் தங்களது இடம் எனக்கூறி பொதுப் பாதையில் மற்றவர் யாரும் பயன்படுத்தக் கூடாது என கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில் முத்துவேலின் பேரன் கோகுல் பெயரில் உள்ள பட்டா நிலத்தில் பொதுப்பாதையாக யாரும் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் கோகுல் தனது இடத்தில் யாரும் பயன்படுத்தாத வண்ணம் வேலி அமைத்துள்ளார்.

இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தாங்கள் பொது பாதையாக பயன்படுத்தி வந்த நிலத்தை வேலி போட்டு தடுத்த கோகுல் குடும்பத்தினரை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் பாதிக்க பட்டதாக கூறப்பட்டுள்ள அப்பகுதியில் கிராம பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் ஏராளமான குவிக்கப்பட்டு இருந்தனர்

காவல்துறையினர் தடையை மீறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அப்பகுதி கிராம பொதுமக்கள் தங்களுக்கு கடந்த 150 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த அந்த பொதுப் பாதையினை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கையை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்பகுதி பட்டா நிலத்திற்கு உரிமையாளரான கோகுல் குடும்பத்தினர் அமைக்கப்பட்ட பின்புற வேலியையும் அடித்து உடைத்தனர்.

இதனையடுத்து கோகுல் குடும்பத்தினர் அமைக்கப்பட்ட முன்புற வேலியை அகற்ற முன் முற்பட்டிருந்த நிலையில் கோகுல் வீட்டில் இருந்த கூரைகளை உடைத்து தரைமட்டமாக்கினர்.

இதனை காவல்துறையினரின் தடுக்க முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி கிராம பொதுமக்கள் முன்னேறி சென்று முன் பகுதியில் இருந்த பள்ளத்தினை மூடியும் வேலியை அகற்றினர்.

அப்போது அங்கு வந்த காவல்துறை டிஎஸ்பி ரவிச்சந்திரன் இது குறித்த பிரச்சனை நீதிமன்ற தீர்ப்பின்படி நில உரிமையாளருக்கு உரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது எனவும், மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நீதிமன்றத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

ஆனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தங்களுக்கு கடந்த 150 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த அந்த பாதையை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தியதால் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 60ற்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி கிராம பொது மக்களை தரதரவென்று இழுத்துச் சென்று காவல்துறை வேனில் ஏற்றி கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!