அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மேலக்குடியிருப்பு, மேலத் தெருவில் வசிக்கும் ஜோதிமணி என்பவரின் மகன், விஜய் (24) என்பவர் மீது கொலைமுயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 03.05.2025-ம் தேதி விஜய்,
தனது ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் வழிப்பறி செய்தது தொடர்பாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. விஜய்
கைது செய்யப்பட்டு, ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் வெளியே வந்தால் மீண்டும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், விஜய் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் பரிந்துரை செய்ததன் பேரில், அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசமி,விஜய் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் விஜய்
“குண்டர்” என குண்டர் தடுப்பு சட்டத்தின் படி காவல்துறையினரால் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
