ஆண்டிமடம் அருகே இருசக்கர வாகனம் தராத தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகிறார்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை. இவரது மகன் மணிகண்டன். இவர் எப்போதும் தனது தந்தையிடம் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். நேற்று இரவு இருசக்கர வாகனத்தை தருமாறு கேட்டு தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அவருடைய இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்றுள்ளார். பின்னர் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில்

பெட்ரோலை வாங்கி வந்த மணிகண்டன் தந்தை வீட்டில் பீடியை பற்றவைத்துக் கொண்டு புகைத்துக் கொண்டிருந்த நிலையில் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி திடீரென பிச்சைப்பிள்ளை மீது பெட்ரோலை ஊற்றிய நிலையில் பீடியில் இருந்த நெருப்பு உடனடியாக பரவ பிச்சைப்பிள்ளை தீயில் சிக்கிக் கொண்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து உடனடியாக அவர் மீது இருந்த தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிச்சைபிள்ளை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

