அரியலூர் மாவட்டம் தாமரைக் குளம் கிராமத்தில் உள்ள டால்மியா சிமெண்ட் ஆலய நிர்வாகம் சார்பில், அருள்மிகு ஸ்ரீ பக்த அனுமான் திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோவிலில் 15 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி மஹோஸ்த்தவம் இன்று சிறப்பாக நடைபெற்றது. 7 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, ஆஞ்சநேயருக்கு பட்டாடை உடுத்தி,

வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறி, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியில் திரளான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ பக்த ஹனுமானை தரிசனம் செய்தனர்.

