அரியலூர் – சோழப்பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்
பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை நவீன கருவி மூலம் பார்த்து ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த

மெய்நிகர் யதார்த்த அரங்கையும் திறந்து வைத்தார்
சோழப் பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து சென்று அதில் வெற்றி பெற்றதன் நினைவாக அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரை நிறுவி அங்கு சோழர்களின் கட்டிடக்கலையை விளக்கும் வகையில் பிரதீஸ்வரர் ஆலயத்தை நிறுவினார். இது

உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமாகவும் பாதுகாக்கப்படும் புராதான சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது குடும்பத்துடன் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வரவேற்றார். மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வேத மந்திரங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது இதனையடுத்து தனது குடும்பத்துடன் பிரகதீஸ்வரரை வழிபட்டார். கோவில் வளாகத்தை சுற்றி வந்த மத்திய முக்கிய ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கோவிலின் சிறப்பு அதில் பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களின் தொன்மை அதன் சிறப்பு ஆகியவை குறித்து தொல்லியல் துறை சார்பில் விளக்கப்பட்டது மேலும் கோவில் வளாகத்தில் தனது குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் இதனையடுத்து கோவில் வளாகத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட மெய்நிகர் யதார்த்த அரங்கினையும் திறந்து வைத்து அங்கிருந்தபடியே நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி மூலம் சித்தன்னவாசல், தஞ்சை பெரிய கோவில் ஆகியவற்றை தத்ரூபமாக பார்த்து அதிசயித்தார். நிகழ்ச்சியில் தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

