Skip to content

அரியலூர் – ரயிலில் வழுக்கி விழுந்த பெண்.. காப்பாற்றிய ரயில்வே போலீஸ்..

அரியலூர் ரயில் நிலையத்திற்க்கு முதலாவது நடைமேடைக்கு விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் வண்டி எண் 56111 பயணிகள் ரயில் வந்து திருச்சிக்கு கிளம்பியது.

இந்நிலையில் மிதமான‌ மழை பெய்து கொண்டிருந்த போது அப்போது இரண்டு பெண்‌

பயணிகள் கிளம்பிய ரயிலில் ஏறினர்

அதில் ஒருவர்‌ இடது கையில் ரயிலின்‌ கைபிடியே பிடித்து ஏறிய‌ போது வழுக்கி ரயிலில் இருந்து கீழே விழ சென்றார்

இதனை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் செந்தில் கண் இமைக்கும் நேரத்தில் பெண் பயணியை காப்பாற்றி ரயில் உள்ளே தள்ளினார்

உடனே ரயில் நிறுத்தப்பட்டது.
இதனால் அவர்‌உயிர் காப்பாற்றப்பட்டது.

பெண் பயணியின்‌ உயிரை‌ காப்பாற்றிய அவரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

error: Content is protected !!