தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தேர்தல் செலவின கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026-ஐ முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தேர்தல் செலவின கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று (05.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி தேர்தல் தொடர்பான தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மேற்கொள்ளப்பட வேண்டியவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தேர்தல் செலவின கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலர்கள் தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமீறல்களை உடனடியாக விசாரணை செய்து அதனை கைப்பேசி செயலி ESMS/ cVIGIL ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பரிமளம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சந்தானகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஷீஜா (உடையார்பாளையம்), செல்வி.பிரேமி (அரியலூர்), வட்டாட்சியர்கள், தேசிய தகவலியல் அலுவலர் மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

