அரியலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை விழுப்புரத்திலிருந்து, திருச்சி வந்த MEMU ரயில் வந்து நின்று பின் புறப்பட்டு செல்லத் தொடங்கியது.
அப்போது பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏறிச் செல்ல முயன்றார். ரயில்வே தண்டவாளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே தலைமை காவலர் செந்தில் பெண் பயணி நிலை

(காப்பாற்றிய தலைமை காவலர்)
தடுமாறி கீழே விழுவதை கண்டு திடீரென ஓடிச் சென்று தாங்கி அவரை ரயிலில் உள்ளே ஏற்றி விட்டார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
ஓடும் ரயிலில் பெண் பயணி ஒருவர் திடீரென படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த நிலையில்,

துரிதமாக செயல்பட்டு இரயில்வே பாதுகாப்பு படை தலைமைக் காவலர் செந்திலை ரயில்வே பாதுகாவலர்கள் மற்றும் பயணிகள் பாராட்டி வருகின்றனர்.
தலைமைக் காவலர் செந்தில், கடந்த 3 மாதங்களுக்கு முன் இதேபோன்று ஒரு பயணியை ஓடிச்சென்று காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

