புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சன சிறப்பு வழிபாடு இன்று (புதன்கிழமை) நடந்தது. இதனையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர் நடராஜர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.. திரளான நகரத்தார்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
