Skip to content

ஆசிய கோப்பை…இந்தியா- யுஏஇ அணிகள் இன்று மோதல்

  • by Authour

ஆசிய கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஹாங்காங் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இன்று  இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அணியை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையில், இந்திய அணி 9வது முறையாக ஆசிய கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்திய அணி இதுவரை 8 முறை ஆசிய கோப்பையை வென்று, தொடரின் மிக வெற்றிகரமான அணியாக உள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றியுடன் தொடரை ஆரம்பிக்க இந்தியா முனைப்பு காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  மேலும், டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே ஒரே ஒரு போட்டி மட்டுமே நடந்துள்ளது, அதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில், ரோகித், கோலி, ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், பும்ரா, ஹர்திக், ஜடேஜா உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, முகமது ஷமி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

error: Content is protected !!