Skip to content

கமல், ஷாருக்கான் கூட்டணியில் அட்லியின் புதிய படம்

இயக்குநர் அட்லி நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது.ஜவான் வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி புதிய படத்தில் இன்னும் ஒப்பந்தமாகவில்லை. காரணம், ஜவான் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் அடுத்து மிகப்பெரிய பட்ஜெட் படமொன்றை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

இதனால், அதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, நடிகர் அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணி இணைந்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, இயக்குநர் அட்லி நடிகர் சல்மான் கானை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.

 அட்லியின் புதிய படம் உறுதிசெய்யப்பட்டதாகவும் இதில் நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான் இணைந்து நடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம். விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!