Skip to content

பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி-திருச்சி ரவுடிக்கு வலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தீட்சிதர் தோட்டம் 2 -வது கிராஸ் ஸ்ரீ நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவரது மனைவி நிர்மலா (36). இவர் திருச்சி கடைவீதிக்கு பர்சேசிங் செய்வதற்காக வந்தார். பின்னர் மலைக்கோட்டை  அருகே நடந்து சென்றார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர்.
அதிர்ச்சி அடைந்த நிர்மலா சத்தம் போடவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் நிர்மலா கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த வினோத் என்கிற ஆந்தை வினோத் ( 24 ) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளி பீமநகர் சஞ்சீவி என்பவரை தேடி வருகின்றனர். இவர் ரவுடி பட்டியலில் உள்ளதாக தெரிகிறது.

error: Content is protected !!