விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி தரப்பை குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். அவர் பேசியது பின்வருமாறு;
“ஒரு கூட்டம் பொய் செல்வதையே அரசியலாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மனம் புண்படும்படி பேசி வருகின்றனர். என்னை மட்டும் அல்ல.. அரசியல் அனுபவம் கொண்ட ஜி.கே.மணியை வசைபாடுகின்றனர். கட்சிக்காக ஓயாமல் உழைத்தவர் ஜி.கே.மணி. அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை, எதையோ பேசுகிறார்கள். அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியை விட்டு நீக்கிவிட்டோம்.” இவ்வாறு அவர் பேசினார்.

